64 அடி உயரத்தில் கோதண்ட ராமர் சிலை

0
146

பெங்களூரு, ஜூன் 16-
பெங்களூரு கோதண்டராம சுவாமி கோயிலில் கோதண்ட ராமர் திருவுருவச் சிலையாக 64 அடி உயர சிலை அமைக்கப்படுகிறது.
இது தொடர்பாக கோயில் அறக்கட்டளை சார்பில் லட்சுமணன் கூறியதாவது-

பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராமா சுவாமி கோயில் உள்ளது. இங்கு சுவாமி சிலை செய்வதற்காக சுமார் 64 அடி நீளம் 26 அடி அகலம் 7 அடி உயரம் கொண்ட கல்லும் ஆதிசேசன் சிலை அதாவது 7 தலை பாம்புடன் கூடிய சிலை செய்வதற்காக 24 அடி நீளம் 30 அடி அகலம் 12 அடி உயரம் கொண்ட கல்லும் நவீன இயந்திரங்கள் மூலம் தோண்டி வெட்டி எடுக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் உள்ள பாறைக்குன்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இந்த இரண்டு கல்களும் இரண்டு தனி கார்கோ லாரிகளில் பெங்களூருக்கு கொண்டு வரப்படுகிறது. சுவாமி சிலை சுமார் 380 டன் எடையும் ஆதிசேசன் சிலை செய்வதற்கான சிலை செய்வதற்கான கல் சுமார் 230 டன் எடையும் கொண்டதாகும் என்று லட்சுமணன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here