6 வருடம் சிறையில் வாடிய அப்பாவி:போலீசுக்கு எதிராக போராட்டம்

0
107

கார்வார், ஜூன்.30-
வட கர்நாடகா மாவட்டம் கார்வார் அருகில் உள்ள முருதேஸ்வர் நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ் நாயக்-45. கடந்த 6 ஆண்டுக்கு முன்பு முருதேஸ்வர் அருகில் உள்ள கிரிகிந்தூரில் ஒரு முஸ்லீம் பிரமுகர் வீட்டில் வேலை செய்து வந்த யமுனா-28 என்ற பெண் மர்மமான முறையில் வேலை செய்து வந்த வீட்டில் இறந்து போனார். பெண்ணை தேடிய போலீசார் அவர் வேலை செய்த வீட்டிலிருந்து பிணமாக மீட்டனர். இதைப் பார்க்க அக்கம் பக்கத்து கிராமத்தினர் அங்கு குழுமினர். வெங்கடேஷ் நாயக் என்பவரும் பார்க்க சென்றார்.

வெங்கடேஷ் நாயக்கை பார்த்த போலீசார் அவர் தான் யமுனாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார் என குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுத்தனர்.
நான் நிரபராதி என்று வெங்கடேஷ் நாயக் கார்வார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் இவரை நீதிமன்றம் நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. 6 ஆண்டு சிறை வாசத்துக்கு பின் வெளியில் வந்துள்ள வெங்கடேஷ் நாயக் போலீசாருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த உள்ளதாக நிருபர்களிடம் கூறினார்.

யமுனா வேலை செய்து வந்த வீட்டு உரிமையாளர் இஸ்லாமியர். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் இந்து முஸ்லீம் கலவரம் ஏற்படும் என்று அச்சமடைந்த கார்வார் போலீசார் அப்பாவி வெங்கடேஷ் நாயக்கை பலிகடாவாக்கியுள்ளனர். ஸ்ரீராம சேனை உள்ளிட்ட இந்து அமைப்பினரும் வெங்கடேஷ் நாயக்குக்கு ஆதரவாக போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here