500 சிம்கார்டுகள் பயன்படுத்திய பாம்நாகா

0
107

பெங்களூரு, ஏப். 21-
பாம்நாகாவின் முன்ஜாமீன் மீதான விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பெங்களூரு சீராமபுரம் பகுதியில் கடந்த 14ம் தேதி முன்னாள் சவுன்சிலரான வி.நாகராஜ் எனும் பாம்நாகாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில் ரூ. 14 கோடியே 80 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பாம்நாகா வீட்டு ஜன்னலை உடைத்து அவரது மகன் காந்தி மற்றும் சாஸ்திரி ஆகியோருடன் தப்பியோடு தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் நான்கு குழுக்களாக அமைத்து தமிழகம் மற்றும் பெங்களூரில் இன்று வரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகா சார்பில் பெங்களூரில் உள்ள கீழ்க் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி அவரது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் நாகா நீதிமன்றத்தில் ஆஜர் ஆக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசாரால் நாகா இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மேலும் பாம்நாகா கடந்த 14ம் தேதி தொடங்கி இன்று வரை சுமார் 500 செல்போன் சிம்களை மாற்றி பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் நாகாவின் முன்ஜாமீன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு பதிவு செய்த நீதிபதி விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here