2.0’ பட விளம்பரத்துடன் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்கும் ஆர்யா

0
213

ஆர்யா நடிகர் மட்டுமல்ல சைக்கிள் பந்தய வீரர் என்பது நாம் அறிந்ததே. அவ்வப்போது போட்டிகளிலும் கலந்து கொள்கிறார். இப்போது இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் இருந்து எடின்பர்க் வரை சென்று திரும்பும் சைக்கிள் போட்டியில் ஆர்யா கலந்து கொண்டிருக்கிறார்.
1400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்யும் இந்த போட்டி மொத்தம் 5-நாட்கள் நடைபெறுகிறது.

கடந்த 30-ந்தேதி தொடங்கிய இந்த சைக்கிள் பந்தயத்தில் 1500-க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ஆர்யாவும் ஒருவர்.
இந்த சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா கலந்து கொள்ள ரஜினியின் ‘2.0’ பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஸ்பான்சர் செய்கிறது. எனவே அவர் ‘2.0’ விளம்பரம் பொறித்த பனியன் அணிந்து இதில் கலந்து கொண்டிருக்கிறார்.

“தலைவர் ரஜினி, மற்றும் அக்‌ஷய்குமார் ஆசியுடன் இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒரு பெரிய நடிகர் படத்துக்கு இன்னொரு நடிகர் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு விளம்பரப்படுத்துவது இதுவே முதல் முறை.

‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த முதலில் ஹாலிவுட்டில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இப்போது இங்கிலாந்தில் நடைபெறும் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யாவுக்கு ஸ்பான்சர் செய்து படத்தை பிரபலப்படுத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here