2 வெளிநாட்டினர் கைது

0
39

பெங்களூரு, செப். 25-
சில விஷமிகள் வங்கியின் வாடிக்கையாளர் டேட்டா மீது குறி வைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி பேர்வழிகள் இருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், வங்கியில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் விபரங்களை தெரிந்துக் கொள்ள, வெளிநாட்டை சேர்ந்த இரு நபர்கள் முயற்சியில் ஈடுபட்டதை, சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

வங்கி பணியாளர்களுக்கு இந்த மோசடி பேர்வழிகள் பென்டிரைவ் அல்லது சி.டி. கொடுத்து உதவுவதாக முறைகேடு செய்து வந்துள்ளனர். இந்த பென்டிரைவ்களை கம்பியூட்டரில் இணைத்ததுமே வைரஸ் அட்டாக் ஆவதும், பலரின் வங்கி கணக்குகளை நூதன முறையில் அறிந்துக் கொள்ளவும் செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

இ-மெயில் வைரஸ் இருப்பதால் இணைப்புகள் அலுவலக கம்பியூட்டர்களில் ஓப்பன் செய்தால் கணக்கு விபரங்கள் கசிந்து விடுகிறது. இது தொடர்பாக சைபர் செக்யூரிட்டி அமைப்பு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி இருந்தது. பலரின் வங்கி கணக்குகளை அறிந்த மோசடி பேர்வழிகள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
எனவே, வங்கிகளில் பணியாற்றுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here