2 ரவுடிகள் சுட்டு பிடிப்பு

0
53

பெங்களூரு, ஆக. 30-
பெங்களூரில் ரவுடிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு இருவர் காலில் காயம்.
நேற்று டி.ஜி.ஹள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நயாஸ் அகமது ஒரு கொலை வழக்கு தொடர்பாக ரவுடிகளை பிடிக்க டி.ஜி.ஹள்ளிக்கு சென்றார். அப்போது அவரை 3 ரவுடிகள் தாக்க முயன்றனர். அவர்களில் நதீம் என்பவனை நயாஸ் கைது செய்தார்.

மேலும் இரண்டு ரவுடிகள் இம்ரான் வாஜீத் தப்பியோடினர்.
அவர்களை போலீசார் தேடி வந்தனர். இன்று அதிகாலை இருவரும் காரில் சிக்கஜாலா அருகே சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். சிக்கஜாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில் மற்றும் போலீசார் அவர் காரை நிறுத்தினர். கார் நிற்காமல் தப்பியோடி ரோடி டிரைவரில் மோதி நின்றது. அதில் இருந்த இம்ரான், வாஜீத் இருவரையும் போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில் அவர்கள் காலில் சுட்டார். இருவர் காலிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. எலவங்கா அரசு ஆஸ்பத்திரியில் இருவருக்கும் சிகிச்சையளித்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here