150 தொகுதியில் பிஜேபி வெற்றி உறுதி: எடியூரப்பா நம்பிக்கை

0
30

மதுகிரி, ஜன.12-
கர்நாடகாவில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் நீர்வளத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார்.
தும்கூர் மாவட்டம், லால்பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடந்த பிஜேபி பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா கூறியதாவது-

கர்நாடகாவில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில், நீர்வளத்துறையின் பணிகளை நிறைவேற்றப்படும்.ட
சித்தராமையா தலைமையிலான அரசு பெங்களூரில் வீடுகள் கட்ட 975 கோடி ரூபாயில் திட்டமிட்டுள்ளனர். 1400 கோடி ரூபாய் இதற்காக மைசூர் மினரல்ஸ் மூலம் கடன் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு வழங்கிய 35 ஆயிரம் குவிண்டால் கோதுமை உணவு குடோனில் பாழாகிக் கொண்டிருக்கிறது. மாநில மக்களுக்கு வழங்காததால் நாசமாகி வருகிறது.

பிஜேபி ஆட்சியின் போது விவசாயப் பட்ஜெட் விவசாயிகளின் நலனுக்காகவே தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் கடன் 1400 கோடி வட்டியை தள்ளுபடி செய்யப்பட்டது.
இலவச மின்சாரம், பாக்யலட்சுமி திட்டம் ஆகியவைகளை நிறைவேற்றினோம்.
ஆனால் காங்கிரசார், மாநில மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கமிசன் ஆசைக்கு சாதனை விழாக்களை நடத்தி வருகின்றனர்.

நரேந்திர மோடி பிரதமர் ஆன போது பிஜேபியின் ஆட்சி 6
மாநிலங்களில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 19 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி. கர்நாடகாவில் எதிர்க்கட்சிக்குரிய தகுதியை இழக்கும். 150 தொகுதிகளில் பிஜேபி வெற்றி பெறுவது உறுதி என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here