13 பேர் பலி

0
30

பெங்களூரு, ஜன. 13-
பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலாவிற்கு சென்ற கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக ஐராவத் பஸ் ஒன்று ஆசன் அருகே குளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர் 7 பேர் படுகாயமடைந்தனர்.

கே.எஸ்.ஆர்டிசி ஐராவத் பதிவு எண்.கே.ஏ.1 8513 என்ற பஸ் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்டது. ஆசன் அருகே சென்ற பஸ் அதன் டிரைவரின் தூக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பயணிகளை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பயங்கர விபத்து காரணமாக அப்பகுதியில் போக்கு நெரிசல் ஏற்பட்டதை போலீசார் சீர்படுத்தினர். பின்னர் தடைபட்டிருந்த போக்குவரத்து மீண்டும் இயங்கியது
வடகர்நாடகத்தில் தனியார் வேன் ஒன்று மரத்தில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். வட கர்நாடகம் தார்வார் பகுதியில் இருக்கும் கஸ்தகிப் பகுதியை சேர்ந்தவர்கள் கோவா மாநிலத்திற்கு வேன் ஒன்றில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

கார்வார் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது வேண்டினவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய வேன் சாலையோரம் உள்ள மரம் ஒன்றின் மீது மோதியது இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 10 பயணிகளை சம்பவ இடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே ஆட்டோ ஒன்றும் மரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோலார் மாவட்டம் பங்கார்பேட்டையில் ஷேர் ஆட்டோ ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு வழி விடும் வகையில் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை இயக்கிய போது சாலையோரம் இருந்த மரம் ஒன்றின் மீது ஆட்டோ மோதியது இதில் 35 வயது பாஸ்கர் 38 வயது பார்வதம்மா 30 வயது கவுரம்மா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக தகவல் பெற்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here