ஸ்பிரிட் குடித்த 4 பேர் பலி

0
111

தருமபுரி, ஜூன் 30-
பென்னாகரம் அருகே அதிக போதைக்காக மதுவில் போதை பொருள் கலந்து குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரில் பச்சையப்பன், விஜய்,பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மதுபானத்தில் போதைப் பவுடர் கலந்து குடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த அவர்களை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு முதல் தீவிரமாக சிகிச்சை அளித்து, மருத்துவப் பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உத்தரகுமார் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது

இதனையடுத்து அவர்கள் மதுபானம் அருந்திய இடத்தில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மது பாட்டில்களுக்கு அருகில் கிடந்த போதைப் பொருள் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனினும் மதுவில் போதைப் பொருள் கலந்து குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா, அல்லது அது கள்ளச்சாராயமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here