வேகத்தடையால் தினமும் 9 பேர் பலி: கட்கரி

0
42

புதுடில்லி: ஜூலை,21
சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் தினமும் 9 பேர் பலியாவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் தெரிவித்தார்.
இதுகுறித்து சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் தெரிவித்ததாவது: முன்பிருந்ததைவிட தற்போது சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆனால் அதிகரித்து வரும் வாகனம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.
சாலைகளில் அமைந்துள்ள வேகத்தடையால் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த 2015ம் ஆண்டில் 3,409 பேரும், 2014ம் ஆண்டில் 3,633 பேரும் பலியாகி உள்ளனர். வேகத்தடையால் சராசரியாக தினமும் 9 பேர் பலியாகின்றனர். விபத்தை தடுக்க, குறைந்தபட்சம் தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டாம் எனவும், அத்தியாவசிய இடங்களில் சிறிய அளவிலான வேகத்தடைகளை அமைக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here