வெளுக்க தயாராகும் வெயில்

0
71

சென்னை, பிப். 13-
தமிழகத்தில் இருந்து வரும் பனிச் சூழல் விரைவில் விலகி வெயில் கொளுத்தப் போகிறது. இந்த முறை அதிக அளவிலான வெயிலை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்று வானிலை மையமும் கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது பனிக்காலம் இன்னும் விலகாமல் உள்ளது. தொடர் பனி காரணமாகவும், அதிக அளவில் இந்த முறை பனி இருந்ததன் காரணமாகவும் சளி, காய்ச்சல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகமாகவே உள்ளன.

ஆனால் இனி வெயில் வரப் போவதாக வானில மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இனி வறண்ட வானிலை அதிகரிக்கும் என்றும் வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். குளிர்காலம் முடிகிறது குளிர்காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. எனவே அடுத்து வெயில் காலம் தொடங்கி விடும். படிப்படியாக வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரிக்கும் வெயில் இந்த முறை வெயிலும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக பனி அதிகம் இருந்தால் அடுத்து வரும் வெயிலும் கடுமையாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. போகப் போகத்தான் தெரியும் ஆனால் பல நேரங்களில் இயற்கை தன் இஷ்டத்திற்குத்தான் நின்று விளையாடும். எனவே இந்த முறை வெயில் மண்டையைப் பிளக்குமா அல்லது மனதை குளுமையாக்கும் வகையில் குறைவாக இருக்குமா என்பதை போகப் போகத்தான் தெரியும்.

வறட்சி அதிகமாக இருக்கலாம் தற்போதைக்கு மக்களை வாட்டி வரும் பனி மெல்ல விலகி வெயில் அதிகரிக்கும் என்பது மக்களுக்கு சற்று ஆறுதலான விஷயம்தான். அதேசமயம், இந்த முறை மழைக்காலம் சரியாக இல்லாமல், மழை பற்றாக்குறையாகவே பெய்து விட்டுப் போயுள்ளதால் வெயில் காலத்தில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டியிருக்குமே என்ற அச்சமும் மக்களை வாட்டாமல் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here