வெளிநாட்டில் இருந்து தங்கவயல் வந்த அரிய வகை பறவை

0
93

தங்கவயல், மே 13-
அரிய வகை பறவை ஒன்று வெளிநாட்டில் இருந்து தங்கவயலுக்கு விருந்தாளியாக வந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கல் குற்றாலம் ஆகிய இடங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவதும் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் திரும்ப அவை அவைகளுக்கு உரிய நாடுகளுக்கு போய்விடும் இப்போது அது போல அரிய வகை பறவை ஒன்று வெளிநாட்டில் இருந்து தங்கவயல் வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளன.

சொமாலயா என்கிற நாட்டில் இருந்து அமர்மேல்கன் என்ற அரிய வகை பறவை ஒன்று தங்கவயல் வந்திருப்பதை சேட்டிலைட் செயற்கைகோள் மூலமாக கண்டறிந்துள்ளனர்.
நான்கு கடல்களை தாண்டி 22 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ஒரே நிலையில் இந்தியாவுக்கு பூனாவுக்கு பறந்து வந்துள்ளது. நான்கு நாள் பயணத்தில் இது வந்துள்ளது அங்கிருந்து ஒரே நாளில் தங்கவயலுக்கு பறந்து வந்துள்ளது.

தட்டவெப்ப பருவ நிலை காரணணாக இந்த பறவை உணர்ந்து தங்கவயல் வந்துள்ளது.
குறிப்பிட்ட பருவ நிலையின் சுற்றுச்சூழல் மாறியதும் அது மீண்டும் அதன் நாட்டுக்கு திரும்பிவிடும்.
இந்த தகவலை மத்திய அரசின் பறவைகள் பாதுகாப்புத்துறை அதிகாரி சுரேஷ்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.

விருந்தாளியாக தங்கயலுக்கு வந்துள்ள அமர்பேல்கன் பறவை ஆந்தையை போன்ற வடிவம் கொண்டதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்கவயலின் மனிதர் நடமாட்டம் இல்லாத அடர்ந்த மரங்கள் செடிகள் உள்ள குளிர்ந்த இடங்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை கோள் ஆய்வாளர்கள் இந்த பறவை வானத்தில் பறந்துச் செல்வதை சேட்டிலைட் மூலமாக கண்டுள்ளனர். இதன் உடல் அமைப்பும் வண்ணமும் வித்தியாசமாக தெரியவே இந்த பறவை எங்கு பறந்து செல்கிறது என்பதை தொடர்ந்து சேட்டிலைட் செயற்கைகோள் மூலமாக கவனித்து இந்த அரியவகை பறவை 22 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்துள்ளதை துல்லியமாக கணக்கிட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here