விஷாலை தம்பியாக்கிய மிஷ்கின்

0
136

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துப்பறிவாளன்’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இதில் அனு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ், ஜான் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

“விஷாலுடன் எனக்கு அதிக பழக்கம் கிடையாது. எப்போதாவது நிகழ்ச்சியில் பார்க்கும் போது ஒரு ‘ஹலோ’ சொல்வோம், அவ்வளவுதான். நான் பல வருடம் உழைத்து எழுதிய கதை ‘துப்பறிவாளன்’. இதற்கு விஷால் தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. போய் கேட்டேன். எப்போது சூட்டிங் என்று சொல்லுங்கள் வருகிறேன் என்றார்.

இந்த படத்தில் நடிக்க வந்த பிறகு விஷால் என் தம்பி ஆகிவிட்டார். இன்று பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவன், இவன் என்று கூப்பிடும் உரிமையை எனக்கு கொடுத்திருக்கிறார். அது தான் அவருடைய பெருந்தன்மை. ‘துப்பறிவாளன்’ காசுக்கு பின்னால் ஓடுகிற மனிதர்களைப் பற்றிய கதை. ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர ஒரு துப்பறிவாளன் நடத்தும் போராட்டம்தான் இது. இந்த படம், எனக்காக இல்லாவிட்டாலும் தம்பி விஷாலுக்காகவாது ஜெயிக்க வேண்டும். கண்டிப்பாக ஜெயிக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here