விரைவில் எடக்கு பண்ண வரும் விஜய் சேதுபதி

0
175

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். மதுரை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘96’, ‘ஜுங்கா’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. இத்துடன் ‘எடக்கு’ படமும் தயாராகி வருகிறது. இப்படத்தில் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்.

நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பாலு இப்படத்தை தயாரித்து வரும் இப்படத்தை எஸ்.சிவன் இயக்கி வருகிறார். ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது. மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here