விமர்சனம்: கவண்

0
389

நடிகர்கள்: விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியன், விக்ராந்த், சாந்தினி தமிழரசன், ஜெகன், பாண்டியராஜன், ஆகாஷ்தீப் சாய்கல், பாஸ் வெங்கட், ஸ்ரீனிவாசன்
இயக்கம் : கே.வி.ஆனந்த்
தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட்
இசை : ஹிப் ஹாப் தமிழா
கதை:விஜய் சேதுபதி, மடோனா ஆகியோர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்கின்றனர். அந்த தொலைக்காட்சியின் TRP-யை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்க்கின்றனர்.
விஜய் சேதுபதி கற்பூரம் போல் எந்த வேலையாக இருந்தாலும் உடனே செய்து அசத்துகின்றார், அந்த சேனலில் பிரபல கட்சி தலைவர் ஒருவரை எப்போதும் கேலி, கிண்டல் செய்து வெளியிடுகின்றனர்.
அவர் ஒரு கட்டத்தில் அந்த தொலைக்காட்சியுடன் ஒரு டீல் செய்கின்றார், அதிலிருந்து அவர் மீது கலங்கப்படுத்தப்பட்ட தவறுகள் எல்லாம் மீடியா நியாயமாக்குகின்றது.
இதன் பின்னணியில் நல்ல நோக்கத்திற்காக போராடும் விக்ராந்த் மற்று அவரின் காதலி பாதிக்கப்பட, மீடியாவால் நல்லது செய்ய முடியும் என விஜய் சேதுபதி, டி.ஆர் உடன் கூட்டணி அமைத்து ஆடும் ருத்ரதாண்டவம் தான் மீதிக்கதை.
ஒரு சில மீடியாக்கள் குறிப்பாக தொலைக்காட்சி மீடியாக்கள் தங்கள் சேனல் பரபரப்பு குறையகூடாது என்பதற்காக செய்யும் பித்தாலட்டங்களை வெளிப்படையாக காட்டியதற்காகவே கே.வி.ஆனந்தை மனம் திறந்து பாராட்டலாம்.
அதிலும் அழகான பெண்களை கடைசி ரவுண்ட் வரை வர வைப்பது, திறமையை எலிமினேட் செய்வது என பல இடங்களில் நச் கருத்தை ஆழப்பதித்துள்ளார்.
மீடியாவிற்கு என்று ஒரு தர்மம் உள்ளது, நல்ல செய்தியை கூட சென்சேஷ்னலாக காட்ட முடியும் என அதற்காக அவர் எடுக்கு முயற்சி என இந்த படத்தில் அனைத்து செண்டர் ஆடியன்ஸையும் கவந்திருகிறார் விஜய் சேதுபதி.மடோனாவுடன் சேட்டைகள் என விஜய் சேதுபதி அசத்தல் தான்.
டி.ஆர் தான் ரியல் லைபில் எப்படியோ அதே தான் படத்திலும், பட்டையை கிளப்புகின்றார்.விக்ராந்திற்கு இந்த படம் கண்டிப்பாக திருப்புமுனை தான், அவரின் காதலியாக வருபவரும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு.
மொத்தத்தில் இன்றைய சமூக நிலையை தொலைக்காட்சிகள் எப்படி பயன்படுத்துகின்றது என்பதை தோல் உறித்து காட்டுகின்றது கவண்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here