விபத்தில் சிக்கிய தொழிலாளி பலி

0
60

பேளூர்: ஏப்.20
திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன், 35, கூலித் தொழிலாளி. இவர் கடந்த, 7ல், அதே ஊரை சேர்ந்த தஞ்சியப்பன், 35, என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டரில் அமர்ந்து சென்றார். படவேட்டம்மன் கோவில் குளம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன், சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அவர் இறந்தார். இதுகுறித்து, சந்தவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, டிராக்டர் டிரைவர் தஞ்சியப்பனை நேற்று கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here