விதான சவுதாவிலும் வாக்குபதிவு விறுவிறுப்பு

0
31
mlas are stangingin que to caste there votes

பெங்களூர், ஜூலை.17-
ஜனாதிபதி தேர்தலுக்காக கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் விதான சவுதாவிற்குச் சென்று வாக்களித்தனர்.

இந்தியாவின் 15வது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் காலை முதல் தொடங்கியது. அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற நியமன உறுப்பினரைத் தவிர்த்து 224 உறுப்பினர்கள் காலை முதல் வாக்களித்தனர். ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் சித்து உள்ளிட்ட 123 உறுப்பினர்கள் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான மீராகுமாருக்கு வாக்களித்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் ஜனதா தளம்-எஸ் கட்சியை சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்களும் மீராகுமாருக்கு வாக்களித்திருக்கலாம் என்றும் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான பிஜேபி கட்சியை சேர்ந்த 44 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ள பிஜேபி கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கர்நாடகத்தின் 28 பாராளுமன்றம் 12 ராஜ்யசபா உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினரான பிரசாத் உக்கேரி விதான சவுதாவில் ஜனாதிபதி தேர்தலுக்காக தனது வாக்கை பதிவு செய்தார். இன்று வாக்குப் பதிவு முடிந்து வரும் 20 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here