விஜய்யின் `மெர்சல்’ விநியோக உரிமையை கைப்பற்றிய படநிறுவனம்

0
369

அட்லி இயக்கி வரும் `மெர்சல்’ படத்தில், விஜய் ஜல்லிக்கட்டு வீரர், மேஜிக் கலைஞர், மருத்துவர் என 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
விஜய் ஜோடியாக இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீசாக இருக்கும் இப்படத்தை, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கான விநியோக உரிமையை எம்.கே.எஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனமே அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இறுதிகட்ட படப்படிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், `மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here