வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

0
25

ஓசூர்: ஜன. 11
வழிப்பறியில் ஈடுபட்ட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான போலீசார், காமன்தொட்டி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த, மூன்று பேரை பிடித்து விசாரித்த போது, ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த இம்ரான், 20, அலேசீபம் பகுதியை சேர்ந்த முரளி, 19, உத்தனப்பள்ளி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முனிராஜ், 20, என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன், காமன்தொட்டி அருகே கங்காபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரை, கோபசந்திரம் பஸ் ஸ்டாப் அருகே மிரட்டி, மொபைல்போனை பறித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here