வள்ளி, தெய்வானையுடன் சுவாமி திருவீதி உலா

0
31

தர்மபுரி: மே.12
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள ஓம்சக்தி விநாயகர் வேல்முருகன் கோவிலில், முருகருக்கு, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, 9:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் முருகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, நெசவாளர் காலனியில் உள்ள வீதிகள் வழியாக வள்ளி, தெய்வானையுடன், மணக்கோலத்தில், சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here