வத்தல்மலை பாதையை தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தல்

0
82

தர்மபுரி, ஏப்.17
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், 12வது வட்ட மாநாட்டில் காளிகரம்பு, வத்தல்மலை பாதையை, தார்ச்சாலையாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின், 12வது தர்மபுரி வட்ட மாநாடு, ஒன்றிய தலைவர் பழனி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மல்லையன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், புதிய வட்ட தலைவராக பச்சியப்பன், செயலாளராக கணேசன், பொருளாளராக மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், வறட்சியை முழுமையாக ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க வேண்டும். தர்மபுரி ஒன்றியத்தில் மக்களுக்கு குடிநீர், கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், அனைத்து பஞ்., உள்ள மக்களுக்கும் வேலை வழங்க வேண்டும். கொண்டகரஹள்ளி பஞ்.,ல் உள்ள காளிகரம்பு, வத்தல்மலை பாதையை தார்ச்சாலையாக மாற்றவேண்டும். வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் காற்று மாசுபடும் அளவில் கழிவுபொருட்கள் எரிப்பதை தடுக்கவேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here