லாரி டிரைவரிடம் பிக்பாக்கெட் அடித்த வாலிபருக்கு காப்பு

0
40

ஓசூர்: ஜூன்.19
தர்மபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் சிங்காரம், 50, லாரி டிரைவர். இவர் கர்நாடகா மாநிலம், சித்திரதுர்கா பகுதியில் இருந்து மக்காசோளம் லோடு ஏற்றிக் கொண்டு, சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதிக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி அருகே பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்புவதற்காக லாரியை நிறுத்தி விட்டு, சிங்காரம் கீழே இறங்கினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சிங்காரம் பாக்கெட்டில் இருந்த, 200 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். இதை கவனித்த சிங்காரம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை பிடித்து, ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், ஒன்னல்வாடி பகுதியை சேர்ந்த சிவானந்தம், 21, என்பவது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here