ரெயில் தடம் புரண்டது

0
63

ஐதராபாத், ஏப். 21-
இன்று காலை அவுரங்காபாத் – ஐதராபாத் இடையிலான பயணிகள் ரெயில் கர்நாடக மாநிலம் பால்கி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கம் மற்றும் கால்காபூர் கிராமங்களுக்கு இடையே தடம் புரண்டது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது.

ரெயில் என்ஞ்ஜின் மற்றும் ரெயிலின் இரு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி சென்றது. என்ஜின் கவிழ்ந்து விட்டது. காலை 4 மணியளவில் இந்த விபத்தானது நேரிட்டு உள்ளது. இந்த விபத்தில் 2 பயணிகளுக்கு மட்டும் காயம் ஏற்பட்டு உள்ளது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்கள் உடனடியாக பால்கி தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நேரிட்ட மார்க்கத்தில் ரெயில்வே சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

கவிழ்ந்து கிடக்கும் என்ஜின் மற்றும் பெட்டிகளை மீட்கும் பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது, விரைவில் சரிசெய்யபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து நேரிட்ட பகுதிக்கு அதிகாரிகளும் சென்று ஆய்வு செய்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here