ரூ. 1645 கோடி கடனுக்கு ரூ. 1100 கோடி வட்டி

0
79

பெங்களூரு, ஜூலை 17-
பெங்களூரு மாநகராட்சி அதற்கு சொந்தமான அசையா சொத்துக்களை ரூ. 1645.85 கோடிகளுக்கு அடகு வைத்து அதற்கான வட்டியாக இதுவரை ரூ.1100 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர் பெங்களூரு மாநகராட்சி பல்வேறு காரணங்களுக்கு அட்கோ எனும் நகர மேம்பாட்டு மையத்தில் கடந்த 2011-12 மற்றும் 2012-13-ம் நிதியாண்டுகளில் மாநகராட்சிக்கு சொந்தமான அசையா சொத்துக்களான 11 சொத்துக்களை அடகு வைத்து பல்வேறு காலக்கட்டங்களில் ரூ.1645-85 கோடி கடன் பெற்றது.

இந்த கடனுக்கு இது வரை ரூ.1100 கோடி வட்டியாக செலுத்தி உள்ளது. மேலும் 11 அசையா சொத்துக்களில் மகாத்மாகாந்தி சாலையில் உள்ள யூனிட்டி கட்டடம் மற்றும் மேயோஹால் உள்ளிட்ட 3 அசையா சொத்துக்கள் மீட்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் தற்போதும் 8 அசையா சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளது. கே.ஆர்.மார்க்கெட், மல்லேஸ்வரம் மார்க்கெட், தாசப்பா பில்டிங், நகராட்சி கிழக்கு மண்டலக்கட்டிடம் கலாசிபாளையம் மார்க்கெட் ராஜாஜிநகர் காம்ப்ளக்ஸ் இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படும் ஸ்லாட்டர் ஹவுஸ் ஆகிய முக்கிய இடங்கள் மீட்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here