ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் ஜிஎஸ்டி

0
36

புதுடெல்லி, அக். 12-
நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பது தொடர்பாக வரும் நவம்பர் மாதம் இறுதி முடிவு மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பதாவது-

கட்டிடத்திற்கான பொருள்கள், கட்டிட விற்பனைகள் உள்ளிட்டவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக 12 சதவிகிதம் தற்போது விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் வீடுகளுக்கான நிலம் வணிக மையங்களுக்கான நிலம் போன்றவைகள் மீது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

சில மாநிலங்கள் வரி விதிப்புக்கு எதிர்ப்பும் சில மாநிலங்கள் ஆதரவும் தெரிவித்து வருகிறது. என்னைப் பொறுத்த வரையில் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த துறையில் மிகப்பெரும் பணபரிமாற்றம் உள்ளது எனவே இந்தத்துறைக்கு வரிவிதிப்பதில் தவறில்லை.

இந்நிலையில் இரு வேறு கருத்துகளுடன் உள்ள மாநிலங்களிடையே ஒரு மித்த கருத்தை உருவாக்கி இந்தத்துறைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பாக வரும் நவம்பர் 9-ம் தேதி கவுரத்தியில் நடைபெறும் ஜிஎஸ்டி குழுக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அருண்ஜெட்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here