ரித்திகாவை ஹீரோவாக்கிய லாரன்ஸ்

0
353

ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிக்கும் படம் சிவலிங்கா. பி.வாசு இயக்க, ஆர்.ரவிந்திரன் தயாரிப்பில் கடந்த 2 மாதமாக திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து தள்ளிப்போய்க் கொண்டிருந்தநிலையில் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

இதுபற்றி லாரன்ஸ் கூறும்போது,’ரஜினி நடித்து அதிக படங்கள் இயக்கியவர்களில் ஒருவர் பி.வாசு. அவருடன் பணியாற்ற தொடங்கிய முதல்நாள் பயமாக இருந்தது. நட்பாக பழகி பயத்தை போக்கினார்.

இதில் ரித்திகாசிங்தான் முதல் ஹீரோ. கஷ்டப்பட்டால்தான் அவரது காட்சிகள் ஓ.கே ஆகும் என்ற நிலையில் கடினமான உழைப்பு தந்திருக்கிறார். 2வது ஹீரோ வடிவேலு. அவ்வளவு காமெடி செய்திருக்கிறார். 3வது ஹீரோ சக்தி. கிளைமாக்ஸ் காட்சியில் என்னை கண்கலங்க வைத்துவிட்டார். அந்த வகையில் நான் நான்காவது ஹீரோதான். காஞ்சனா’ படம்போல் இப்படத்துக்கும் நன்றாக இசை அமைத்திருக்கிறார் தமன்.ராதாரவி, பானுப்ரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்’ என்றார்.

இயக்குனர் பி.வாசு கூறும்போது,’லாரன்ஸும், ரித்திகா சிங்கும்தான் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் என்பதை தொடக்கத்திலேயே முடிவு செய்து விட்டேன். வடிவேலு, சக்தியுடன் புறா ஒன்றும் நடித்திருக்கிறது. ஒரு கொலைக்கு புறா எப்படி சாட்சியாக முடியும் என்ற புதுயுக்தியை கதையாக்கியிருக்கிறேன்’என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here