மோதல் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

0
90

பெங்களூரு, ஜூலை 17-
கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் டிஐஜி ரூபா ஆகியோர் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு அதிகாரிகளும் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறைச்சாலைக்கு ஆய்வுக்குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ராஹர சிறைச்சாலையின் முதல் மாடியில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு தனி சமையலறை சமையல்காரர் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றுக் கொண்டு விதி மீறலாக அளிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை துணை ஆணையர் ரூபா சிறைத் துறை ஆணையர் சத்திய நாராயணா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையை அளித்திட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வினய்குமார் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இன்று பரப்பன அக்ராஹரம் சிறையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக மத்திய சிறைச்சாலை சூப்பிரடெண்ட் கிருஷ்ணா குமார் உத்தரவின் பேரில் சிறை முழுவதும் உடனடியாக சுத்தப்படுத்தப்பட்டது.

மேலும் சிறை முழுவதும் உள்ள கைதி அறைகளுக்கு தேவையானவைகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறையில் உள்ள சிசிடிவி காமிராக்கள் செயல்படும் வகையில் தயார்படுத்தப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு சிறைக்கு மாற்றம்
சிறையில் சசிகலா சொகுசாக வாழ்ந்து வந்த புகாரை தொடர்ந்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து தும்கூர் அல்லது பெலகாவி சிறைக்கு அவர் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here