மேஷம்

0
308

இந்த வாரம் எடுத்துக் கொண்ட அல்லது ஈடுபடும் காரியங்களால் தெளிவான மனநிலையோடு செயல்பட வைக்கும். மேலும் குடும்பத்தில் சில வகையில் குழப்பங்கள், பிரச்சனைகள் நிலவிய போதும் அமைதியான சூழ்நிலைக்கு பாதிப்பு இருக்காது.

கடன் சற்று கவலை தரும். இல்லறத் துணையின் அனுசரிப்பு மகிழ்ச்சி தரும். குழந்தைகள் வகையில் செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும். வெளிவட்டார பழக்க, வழக்கங்களில் உதவிகள் தாமதப்பட்ட போதும் கிடைக்கப் பெறுவீர்கள்.

சூழ்நிலை என்றபோதும் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வீர்கள். மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் முதன்மை இடத்துக்கு வர அனைத்து வகையிலும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு தங்களின் சிந்தனைகள் மற்றவர்களை சிந்திக்க வைத்த போதும் வெற்றியடைய சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here