முதல்வர் சித்து கொடியேற்றுகிறார்

0
30

பெங்களூரு, ஆக. 13-
சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 15-ம் தேதி கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு மனேக்ஷா ராணுவ மைதானத்தில் சுதந்திர தின விழாக்கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு முதல்வர் சித்தராமையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாநில மக்களுக்கு அரசு சார்ந்த செய்தியை உரையாற்றுகிறார்.

இதில் மாநில ஆளுநர் வஜுபாய்வாலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் இவர்களுடன் மாநில அமைச்சர்கள் பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி அமைச்சர்கள் சட்டமன்றம் மேல்சபை பாராளுமன்றம் உறுப்பினர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
இவர்களுடன் அரசியலுக்கு அப்பாற்பட்ட முக்கியப்பிரமுகர்கள் அவரவர் குடும்பத்தாருடன் கலந்து கொள்கின்றனர். மேலும் ராணுவம் போலீஸ் மற்றும் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் பெங்களூருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுத்திடும் வகையில் மனேக்ஷா மைதானம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 டிஜிபி 16 ஏசிபி 8 ராணுவ துணைப்படையுடன் 1000 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கர்நாடகம் முழுவதும் சுதந்திரதினவிழாவின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக பெங்களூரு முழுவதும் மிகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here