முதல்வர் சித்தராமையா பொங்கல் வாழ்த்து

0
18

பெங்களூரு, ஜன. 13-
பொங்கல் திருநாளை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு முதல்வர் சித்தராமையா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சித்தராமையா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது-

கன்னடர், தமிழர், தெலுங்கர், மலையாளிகள் என அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழும் மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. கர்நாடக மக்கள் சங்கராந்தி எளை பெயரிலும் தமிழர்கள் பொங்கல் என்ற பெயரிலும் பண்டிகை கொண்டாடுகின்றனர்.

குறிப்பாக கிராமங்களில் உள்ள விவசாயிகள் மகளிர் கொண்டாடும் பண்டிகையாக பொங்கல் திகழ்கிறது பொங்கலன்று கிராமங்களில் உள்ள வீடுகளில் கரும்பு வண்ணக்கோலங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு இந்தஸ பண்டிகையை வரவேற்பர்.

வீடுகளில் ஒரு பக்கம் விவசாயிகள் விளைவித்த வேளாண்பொருள்கள் மறுபக்கம் அலங்கரிக்கப்பட்ட பசு, காளைகள் உள்ளிட்ட கால் நடைகள் என விவசாயிகள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர் சாதிகளைக் கடந்து பொங்கலைக் கொண்டாடும் மாநிலத்தில் வாழும் அனைத்து மக்கள் குறிப்பாக விவசாயிகள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்பதே எனது ஆழ் மனதின் வாழ்த்துக்களும் ஆசைகளும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here