மீண்டும் திருமணம் செய்யும் ஐடியாவில் அமலா பால்

0
377

தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது அமலா பாலுக்கும் இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2014ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகும் அமலா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

திருமணமான வேகத்தில் அமலா பால், விஜய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் சென்றனர். அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் பிசியாகிவிட்டார். மலையாளம், தமிழ் என கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடு நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும் போது எல்லாம் எங்காவது சுற்றுலா சென்றுவிட்டு வருவார். தனியாக பயணம் செய்வது புது நம்பிக்கை அளிப்பதாக கூறி வருகிறார்.

அமலாவுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா உள்ளதாம். திருமணம் நடக்கும்போது அவரே சொல்வாராம். தற்போதைக்கு அவர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here