மின் கம்பியை மிதித்த பெயிண்டர் பலி

0
35

பெங்களூரு, ஆக. 13-
மின்சார கம்பியை மிதித்த பெயிண்டர் சாவு 3 மாதத்துக்கு பின் பெஸ்காம் பிபிஎம்பி மீது போலீஸ் வழக்கு பதிவு.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சித்காம் குமார் சென் பெங்களூரில் கேஆர்புரத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார் கடந்த மே 6-ம் தேதி கேஆர்புரம் டின்பேக்டரி அருகில் கீழே கிடந்த மின்சார ஒயரை மிதித்து கொண்டு சென்ற போது மின்சாரம் பாய்ந்து இறந்து போனார்.

கேஆர்புரம் போலீசார் இயற்கைக்கு மாறான சாவு என்று வழக்குப்பதிவு செய்து உடலை கேட்க யாரும் வராததால் இறுதி அடக்கம் செய்து விட்டனர்.
கடந்த ஜூலை 10-ந் தேதி சித்காம் சென் சகோதரர் பெங்களூருக்கு வந்தார். தனது சகோதரர் இறந்து போன தகவலறிந்து மகாதேவபுரா போலீசார் சித்காம் சென் போட்டோவை காட்டி விபரம் கேட்டார் இதையடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி பெஸ்காம் ஊழியர் மின்சார ஒயரை சரியாக பதிக்காததால் தன் சகோதரர் இறந்து விட்டார் என புகார் செய்தார்.

போலீசார் பெஸ்காம் மீதும் பிபிஎம்பி மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அலட்சியத்தால் சித்காம் சென் இறந்து போனதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here