மிதுனம்

0
161

இந்த வாரம் தேவையற்ற பயம், சந்தேகம், மனக்குழப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிலும் நிதானம் பிரதானமாக இருக்கட்டும். பணநிலையில் வருமானங்கள் கூடும்.

கடன்கள் குறையும். பணம் சம்பந்தப்பட்ட வகையில் சில மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவில்லை என்ற போதும் அவ்வப்போது ஏற்படும் வாக்குவாதங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

பெற்றோர்களுக்காக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடன் பிறப்பின் விவகாரங்களில் சற்று முன்னெச்சரிக்கையான செயல்பாடு நல்லது. தொழில் நிலையில் நவீன தொழில் நுட்பங்களும், தங்களின் வியூகங்களும் வெற்றி தரும். வியாபாரத்தில் சரக்கு இருப்பு வைத்துக் கொள்வதில் கவனம் இருக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here