மாவட்டத்தில் கடும் வறட்சியால் களைகட்டும் பானை விற்பனை

0
12

சேலம்: ஏப். 20-
கடும் வறட்சியால், பானைகள் விற்பனை களை கட்டியுள்ளது. சேலம் மாவட்டத்தில், 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் வாட்டி வருகிறது. இதனால், மக்கள் குளிர்ச்சியான நீராகாரங்களை பருகி வருகின்றனர். குறிப்பாக, வீட்டில் ப்ரிட்ஜ் இல்லாதவர்கள், தண்ணீர் பானைகளை வாங்கி வருகின்றனர். இதனால், அவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. ஒரு பானை விலை, 130ல் இருந்து, 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அவை, 13 முதல், 15 லிட்டர் கொள்ளளவில் உள்ளது. தங்கள் தேவைக்கு ஏற்ப, மக்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டு கோடை காலத்தில் விற்ற பானைகள் விலையை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, அவற்றின் விலை, 10 முதல், 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மக்கள் வசதிக்காக, குழாய்கள் பொருத்தப்பட்டு, பானைகள் விற்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here