மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்

0
105

வேப்பனஹள்ளி, ஜூலை, 16
வேப்பனஹள்ளியில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வேப்பனஹள்ளி வட்டார வள மையத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முகாமில், கண் மருத்துவர், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், குழந்தைகள் நல மருத்துவர், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர், மாணவ, மாணவியரை பரிசோதித்து, தகுதியுள்ளவர்களுக்கு நலத்திட்டங்களை பரிந்துரைத்தனர். மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, 26 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். முகாமில், ஆறு செவி துணைக்கருவியும், மூன்று சக்கர நாற்காலிகளும், இரண்டு சிறப்பு நாற்காலியும் வழங்கப்பட்டன. இதில், இரண்டு நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவும், 34 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை மற்றும், 93 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறவும் பரிந்துரைக்கப்பட்டன. முகாமில், 232 மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பெலிசிட்டாமேரி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
* இதேபோல், அரூர் நான்குரோட்டில் உள்ள பாட்சாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளை சம்பந்தப்பட்ட துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here