மார்கழி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள்

0
9

பெங்களூரு, ஜன. 12-
மார்கழி மாத இறுதிச் சனிக்கிழமையை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை காலை முதல் சிறப்பு பூசைகள் நடைபெறுகிறது.
பெங்களூர் மல்லேஸ்வரம் வயாலிக்காவல் 16வது கிராசில் சவுடய்யா மெமோரியல் மண்டபம் அருகே அமைந்துள்ள திருமலை ஏழுமலையான் கோயிலில் நாளை சனிக்கிழமை மார்கழி மாத இறுதி நாள் சனிக்கிழமை என்பதால் கோயில் நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர்களுக்கான பூசைகள் முடிக்கப்பட்டு 6 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனங்களுடன் இரவு வரை பூசைகள் ஆராதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சிறப்பு பிரசாதமான லட்டு உள்ளிட்டவைகள் இங்கும் வழங்கப்படுகிறது. ஆன்மீக அன்பர்கள் ஆயிரக்கணக்கில் நாலை விடுமுறை தினமாக இருப்பதால் வருகை தருவர் என்பதால் அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here