மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் கைது

0
85

வேலூர்: ஏப்.5
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் கிராமத்தை சேர்ந்த சம்பத் மகன் கோவிந்தராஜ், 21, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்று வரும் போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக, இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதில் மாணவி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ், மாணவியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர், வாணியம்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, கோவிந்தராஜை நேற்று கைது செய்து, வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here