மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்–1 மாணவி பலி

0
67

பாலக்கோடு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஆல்மாரம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம், விவசாயி. இவருடைய மகள் கமலி (வயது16). இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி கமலிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர், கமலியை தர்மபுரி, பாலக்கோடு பகுதியில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 10 நாட்கள் ஆகியும் மாணவிக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
அப்போது மாணவிக்கு மர்ம காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமசிவம் மற்றும் உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலியை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு கமலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி கமலி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஆல்மாரம்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிராமமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கொசுவால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக மாணவி மர்ம காய்ச்சலால் இறந்துள்ளார்.
எனவே இந்த கிராமத்தில் மருத்துவ குழு அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்ததால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here