மரண மழை: 8 பேர் பலி

0
211
Kubararahalli bridge

பெங்களூரு, அக். 14-
பெங்களூருவின் பலத்த மழையில் அடித்துச் செல்லப்பட்ட பூசாரி வாசுதேவ், உடல் இன்று காலை மீட்கப்பட்டது. நிங்கம்மா மற்றும் இவரது மகள் புஷ்பா ஆகியோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் பிஜேபி ஜனதா தளம் எஸ் கட்சி தலைவர்கள் முகாமிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியும் உதவிகள் வழங்கியும் வருகின்றனர்.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சுமார் 6.30 மணியில் இருந்து சுமார் 8.30 மணி வரை இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதன் அளவு சுமார் 88 மில்லி மீட்டராக உள்ளது. இரண்டு காரணமாக பசவேஸ்வரநகர் மகாலட்சுமி லே-அட் விஜயநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக இப்பகுதிகளில் உள்ள ராஜகால்வாயில் வழக்கத்தை விட கூடுதலாக மழைநீர் கலந்ததால் கால்வாயின் கொள்ளளவை விட அதிகமான நீரோட்டம் பாய்ந்தது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக குருபரஹள்ளி பகுதியில் மழை நீர் அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் புகுந்தது. சில வீடுகள் இடிந்தது. அப்பகுதி மக்கள் போக்கிடம் தெரியாமல் பரிதாபமாக தவித்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று பெய்த பலத்த மழையில் சங்கரப்பாவும் அவரது மனைவி கமலம்மாவும் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல் கோயில் பூசாரியான 32 வயது வாசுதேவபட்டர் குருபரஹள்ளி பகுதியில் இருந்த ராஜ்கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டார். மேலும் நிங்கம்மா என்பவரும் அவரது மகளான புஷ்பாவும் ராஜகால்வாயில் அடித்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ராஜகால்வாய் மூலம் அடித்துச் செல்லப்பட்டுள்ள இநத் 2 பேரையும் தீயணைப்பு படையினர் தேசிய பேரிடர் தடுப்பு படையினர் நேற்று இரவு முதல் தீவிரமாக தேடி வருகின்றனர். இது விரைவில் எந்தவொரு அறிகுறியும் கிடைத்திடாத நிலையில் இவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை 5.30 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு 7 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் ராஜாஜி நகர், மடிவாலா, சாந்தி நகர், கோரமங்களா, சிவாஜி நகர், ஹெப்பால், எலகங்கா, இந்திரா நகர், மல்லேஸ்வரம், ஸ்ரீராமபுரம், குருபரஹள்ளி, மெஜஸ்டிக், ஜெய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜாஜி நகர் 5-வது பிளாக்கில் ராஜ்குமார் சாலையில் சாக்கடை கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால்வாய் ஓரம் கட்டப்பட்ட கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்தன.

சேஷாத்திரிபுரத்தில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மரம் விழுந்ததால் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன. குருபர ஹள்ளியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள வெங்கடேஸ்வரா கோவில் அர்ச்சகர் வாசுதேவ் என்பவரை வெள்ளம் இழுத்து சென்றது. அவரது கதி என்னவென்று தெரியவில்லை.
பெங்களூருவில் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் சேதமான கார், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.

குருபரஹள்ளி 18-வது கிராசில் ஒரு வீட்டில் மழைநீர் புகுந்தது. வீட்டில் இருந்து தப்பிக்க காம்பவுண்டு சுவரில் ஏறி குதிக்க முயன்ற சங்கரப்பா, கமலம்மா ஆகியோர் தவறி விழுந்து பலியானார்கள். அவர்களை வெள்ளம் இழுத்து சென்று விட்டது.
குடிசை பகுதி ஒன்றில் வீடு இடிந்ததில் முதியவர் ஒருவர் பலியானார். லக்கரே கெம்பேகவுடா லேஅவுட் பகுதியில் முதியவர் ஒருவர் கால்வாயில் ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதே பகுதியில் மீனாட்சி (57), அவரது மகள் புஷ்பா (22) ஆகியோரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

சாம்ராஜ் பேட்டை சங்கரமடம் அருகில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய வாலிபர் ஒருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் 9 பேர் வரை பலியானார்கள். மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் லாரி ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
யஷ்வந்தபூர் அரசு பஸ் டிப்போ மற்றும் பஸ் நிலையத்தில் 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டன.

நந்தினி லே அவுட் பகுதியில் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் சிறுவன் வெள்ளநீரில் மூழ்க தொடங்கினான். அவனது சத்தத்தை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் காப்பாற்றினர்.
நாயண்டஹள்ளியில் விருசபாவதி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ள நீர் ரோட்டுக்குள் வந்ததால் வாகனம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நவ்ரங்சர்க்கிளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் 50-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் பஸ்கள் செல்ல முடியவில்லை. இன்று காலை வெள்ளம் வடிந்தால் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here