மத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது

0
838

மத்தூர்,டிச.5
மத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நத்தம் கூட்டுரோடு சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த மூர்த்தி மகன் விஜய் (வயது25) என்பவர் மத்தூர் கீழ் வீதி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் கடந்த சில நாட்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் விஜய் திவ்யாவிடம் ஆசை வார்த்தி கூறி 2 நாட்களுக்கு முன்பு கடத்தி சென்று இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதுகுறித்து திவ்யாவின் தாய் சித்ரா தனது மகளை காணவில்லை என மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் விஜய் திவ்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here