மதுரையில் விமானத்தில் திடீர் பழுது: பொன். ராதாகிருஷ்ணன் உயிர் தப்பினார்

0
80

அவனியாபுரம்:மே.17
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் தனியார் விமானம் புறப்பட்டது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய அமர்ந்திருந்தனர்.
விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட போது எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. உடனே பைலட் விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் நிறுத்தினார்.
பின்னர் அவசரம், அவசரமாக பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். பைலட்டின் சாமர்த்தியத்தால் விமானம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விமானத்தை சரி செய்ய நீண்ட நேரம் ஆனது. இதையடுத்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ரெயில் மூலம் சென்னை சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here