மதவாதிகளுக்கு மக்கள் தக்க பாடம்: சித்து ஆவேசம்

0
7

மைசூர், ஜன. 12-
பிஜேபி தலைவர்களை போலீசார் கைது செய்யமாட்டார்கள் பாதுகாப்பு பணியில் அவர்கள் கவனமாக உள்ளார்கள் மக்களாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் மதவாத சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் முதல்வர் சித்தராமையா கூறினார்.

மைசூரில் முதல்வர் சித்தராமையா கூறுகையில்-
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் நல திட்டங்களால் மக்கள் ஆட்சியில் திருப்தி அடைந்துள்ளார்கள்.
அன்னபாக்யா, க்சிரபாக்யா திட்டங்கள் மாநில மக்களுக்கு பயன் அளிக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மக்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் காங்கிரசுக்கு உள்ளது. மீண்டும் கர்நாடகாவில் பிஜேபி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எனவே காங்கிரஸ் ஆட்சியே தொடரும்.
பிஜேபியின் தலைவர்களை போலீசார் யாரும் கைது செய்ய மாட்டார்கள் அவர்கள் வேலையை அவர்கள் செய்வார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here