மணல் கடத்திய லாரி பறிமுதல்

0
15

கிருஷ்ணகிரி:ஜன. 10
மத்தூர் அருகே, மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஸ்டேஷன் போலீசார், காமலாபுரம் – ஊத்தங்கரை சாலையில் உள்ள கொடமாண்டப்பட்டி ஜங்ஷன் சாலையில், நேற்று முன்தினம் காலை ரோந்து வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, மூன்று யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், நடுப்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் சுரேஷ், 27, என்பவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here