மசோதா தாக்கல்:சித்துவுக்கு தலைவலி

0
57
MLA KARJOLL STAGING A PROTEST INSIDE THE ASSEMBBLE WELL IN WOMENS HARSAMENT ISSUE AT BELGAM ASSEMBBLE

பெல்காம், நவ.14-
தனியார் மருத்துவமனை டாக்டர்கள் குறித்து கொண்டு வரப்படும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் ஒரு புறமும், ஆதரவு மறு புறமும் ஏற்பட்டுள்ளதால் பெல்காம் சட்டசபைக் கூட்டத்துக்கு முன், காங்கிரஸ் எம்எல்ஏ, களின் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டியுள்ளார்.

மசோதா தாக்கல் செய்ய காங்கிரசின் எம்எல்ஏக்கள் தரப்பில் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரசிலும் எதிர்ப்பு உள்ளதால் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இம்மசோதாவை நிறைவேற்ற தவறினால் தாம், தமது அமைச்சர் பதவிக்கு ராஜினாமா கொடுப்பதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளதால் முதல்வர் சித்த்ராமையா இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக கொண்டு வரப்படும் மசோதா தொடர்பாக தமக்கு வேண்டிய அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஆலோசனையும் நடத்தினார்.இன்று காலை பெல்காம் சக்யூட் ஹவுசில் சில மூத்த அமைச்சர்களுடன் சர்ச்சை நடத்திய முதல்வர் மருத்துவ மசோதா தொடர்பாக எத்தகைய முடிவை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசித்தார்.

இந்த மசோதாவை நிறைவேற்ற எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அனைவரின் கருத்தறிந்த பின்னரே மசோதா நிறைவேற்ற உள்ளார்.
சில அமைச்சர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், சில அமைச்சர்கள் தனியார் மருத்துவர்களுக்கு ஆதரவாகவும் உள்ளனர். சில அமைச்சர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் சொந்தமாக தனியார் மருத்துவமனைகள் உள்ளதால் தான் மசோதா நிறைவேற சிக்கல் பிணைந்துள்ளது.

இந்த மசோதாவில் டாக்டர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே டாக்டர்கள் பெல்காமில் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது மசோதாவில் திருத்தம் செய்ய அமைச்சர் ரமேஷ் குமாரிடமும் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here