மகா சிவராத்திரி: நான்கு ஜாம வழிபாடு குளிர குளிர அபிஷேகம்

0
64
Gavi gangadhara

சென்னை, பிப். 13-
அன்னை சக்திக்கு 9 தினங்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது என்றால் சிவபெருமானுக்கு ஓர் இரவு மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. விடிய விடிய நான்கு காலங்களிலும் குளிர குளிர அபிஷேகம் செய்யப்படுகின்றன. மகாசிவராத்திரி தினத்தில் இளநீர், பால், தயிர், பன்னீர், பழங்கள், சந்தனம், பஞ்சகவ்யம் என பலவிதமான பொருட்களைக் கொண்டு விடிய விடிய குளிர குளிர அபிஷேகம் செய்யப்பட்டு நைவேத்யம் படைக்கப்படுகிறது.

சிவராத்திரி தினமான இன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம வழிபாடு செய்வதைப்பற்றியும் அப்போது செய்யப்படும் அபிஷேக முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். வில்வமாலை பஞ்சகவ்யம் என்று கூறப்படும் பால், தயிர், நெய், கோமியம், கோசலம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, வில்வ மாலை சாத்தி, தாமரை பூக்கொண்டு அர்ச்சனை செய்து, பயத்தம் பருப்பு சேர்ந்த பொங்கலை இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பஞ்சாமிர்தம் அபிஷேகம் பஞ்சாமிர்தம் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். பின்னர் சந்தனமும், தாமரைப் பூவும் சாத்தி, துளசியால் அர்ச்சித்து, பாயசம் நைவேத்தியம் படைக்க வேண்டும். தேன் அபிஷேகம் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அரைத்த கற்பூரத்துடன் சாதிமுல்லைப் பூவை சாத்தி வழிபட வேண்டும். மேலும் மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

கறும்பு சாறு அபிஷேகம் சிவபெருமானுக்கு கரும்பு சாறு அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டைப் பூவும் சாத்தி, நீலோற்பலப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது இறைவனுக்கு அன்னம் நைவேத்தியம் படைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here