மகரம்

0
152

இந்த வாரம் எடுத்த காரியங்களில் எதிர்பார்ப்புக்கும் மேலாக வெற்றிக்கு வழி வகுக்கும். புதிய முயற்சிகளில் தங்களின் ஈடுபாடு கூடுதலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மேன்மேலும் லாபங்கள் அதிகரிக்கும்.

அலுவலக பணியாளர்களுக்கு விரும்பி இடமாற்றத்திற்கு வாய்ப்புண்டு. சக செளகரியங்கள் கூடுதலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லத் துணையின் விருப்பங்களை சிரமமின்றி நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளால் பெருமையும், பூரிப்பும் ஏற்படும்.

உறவினர்கள் ஓரளவிற்கு உதவிகரமானவர்களாக இருப்பர். உடன்பிறப்பின் விவகாரங்களில் சற்று ஒதுங்கியே இருத்தல் நல்லது வியாபாரிகளுக்கு கொள்முதலில் கூடுதல் தெளிவு அதிகப்படியான லாபத்தை ஏற்படுத்தி கொள்ள உதவும்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் உத்தரவுகளை புரிந்து நடத்தல் சிரமத்தைக் குறைக்கும். மாணவ, மாணவியர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தரத்தைக் கூட்ட உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here