ப.சிதம்பரம் வீடுகளில் சோதனை

0
97

சென்னை: மே.16
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு உள்ளிட்ட 8 இடங்களில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. 9 பேர் கொண்ட குழு 8 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சிவகங்கையில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. வெளிநாடுகளில் முதலீடு, வரிஏய்ப்பு உள்ளிட்ட புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து தற்போது சிபிஐ சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கார்த்திக் சிதம்பரத்தின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பங்குச் சந்தைகளில் முறைகேடு மற்றும் வெளிநாடுகளில்
கோடிக்கணக்கான பண முதலீடு உள்ளிட்ட பல்வேறு புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. இதில் ஒரு வணிக நிறுவனத்திற்கும் இவருக்கும் இடையே கோடிக்கணக்கான ரூபாய் பணபரிவத்தனைகள் முதலீடு செயவதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த அடிப்படையில் மேலும் சில ஆவணங்களை கைப்பற்றுவதற்காக அமலாக்கத்துறை சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது. இதன் அடிப்படையில் தான் இன்று காலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here