போலீஸ் அமைச்சுப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

0
66

கிருஷ்ணகிரி: ஆக,13
தமிழ்நாடு போலீஸ் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. மாநில தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிளை செயலாளர் ஜான் சாக்ரடீஸ், துணைத் தலைவர் சுரேஷ், கண்காணிப்பாளர் முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் விஜயகுமார் வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்குமார், கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட போலீஸ் அலுவலகங்களில், கணினி விபர பதிவுகளை மேற்கொள்ள, விதிகளை தளர்த்தி, உடனடியாக தகுதி உள்ளவர்களை உதவியாளராக பணி நியமனம் செய்ய வேண்டும். அமைச்சு பணியில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தில், கருணை அடிப்படையில் வேலை வேண்டி காத்திருப்பவர்களுக்கு, உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., வீரராகவன், எஸ்.பி., அலுவலக நிர்வாக அலுவலர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here