பேட்டரி கடையில் தீ விபத்து ரூ. 1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

0
49

கிருஷ்ணகிரி, ஆக.13
கிருஷ்ணகிரியில் பேட்டரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கிருஷ்ணகிரி ராசுவீதி பகுதியில் வசித்து வருபவர் சாதிக்(40). இவர் அதே பகுதியில் பேட்டரி, யூபிஎஸ், கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் கடையில் இருந்து கரும் புகை வந்துள்ளது. இதனை அவ்வழியே சென்றவர் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செல்வம், மணிமாறன், பழனி, ஹரிஹரன், சர்குணன், விஜயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. விபத்து குறித்து முதல்கட்ட விசாரணையில் மின் கசிவால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here