பெமல் தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டம்

0
89

தங்கவயல், ஏப்.20-
பொதுத்துறை நிறுவனமான பெமல் தொழிற்சாலையை தனியார் மயமாக ஆக்கப்படுவதற்கு தொழிலாளர் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்தம் செய்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
சர்வக் கட்சிகள் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.சீனிவாசன் பெமலை தனியாருக்கு தாரை வார்ப்பது உடல் நலம் நன்றாக உள்ள மனிதனுக்கு விஷம் கொடுத்து கொல்லுவது போன்றதாகும். லாபத்தில் நடக்கின்ற தொழிற்சாலையை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? என்று சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொருளாளரும் கார்மெண்ட்ஸ் தொழிலாளர் சங்கத் தலைவருமான வி.ரஞ்சித்குமார் பெமலை தனியார் மயம் ஆக்கக் கூடாது. தங்கவயலின் ஒரு கண்ணாக இருந்த தங்கச்சுரங்கத்தை மத்திய அரசு மூடிவிட்டது.

இப்போது இரண்டாவது கண்ணாக இருக்கிற பெமல் தொழிற்சாலையையும் மத்திய அரசு குருடாக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். தங்கவயலில் மத்திய மாநில அரசுகளால் புதியத் தொழிற்சாலைகளை தான் ஏற்படுத்த முடியவில்லை இருக்கிற தொழிற்சாலையை கூட அழிக்க நினைப்பது தங்கவயல் நகரையே அழிப்பதாகும் என்று ரஞ்சித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் அனந்த கிருஷ்ணன் தனியார் மயம் என்பது ஒரு வித புற்று நோயாகும்.

இந்த கொடிய நோயை மோடி அரசு ஏற்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அனந்த கிருஷ்ணன் கூறியுள்ளார்.

3 பேர் சஸ்பெண்ட்
இதற்கிடையே அதிகாரிகளை வேலைக்கு வராமல் தடுத்ததாக ராஜேந்திரன் சிவப்பா சுந்தர் ஆகிய 3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று போராட்டத்தில் கலந்து கொண்ட விவேக் நகரை சேர்ந்த பெமல் தொழிலாளி மூர்த்தி என்பவர் நேற்றிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here